செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை

  • வரிசையில் நிற்கவும்.
  • உங்கள் பயண உடமைகளை 15 கிலோ எடை மற்றும் 60 செமீ நீளம் X 45 செமீ அகலம் X 25 செமீ உயரத்திற்கு மிகாமல் வைத்திருங்கள்.
  • தயவுசெய்து நகரும் படிக்கட்டில் இடது பக்கத்தில் நிற்கவும்
  • பயன்பாட்டிற்குப் பிறகு உடனடியாக நகரும் படிகட்டிலிருந்து விலகிச் செல்லுங்கள்.
  • தேவைப்படும்போது மெட்ரோ பணியாளர்களுக்கு உங்கள் பயணச்சீட்டுகளைக் காட்டுங்கள்.
  • உங்கள் மதிப்புமிக்க பொருட்களை கவனித்துக் கொள்ளுங்கள்.
  • குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் வயதான பயணிகளுக்கு உங்கள் இருக்கையை வழங்கவும்.
  • வாகனம் நிறுத்துமிடத்தில் உள்ள வாகனங்களுக்கு சி.எம்.ஆர்.எல் பொறுப்பாகாது
  • குப்பை கொட்ட வேண்டாம், தயவுசெய்து குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துங்கள்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு வழிவிடுங்கள்.
  • உதவிக்கு நிலையக் கட்டுப்பாட்டாளர் அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.
  • உரியப் பயணச்சீட்டு இல்லாமல் மெட்ரோ இரயிலில் பயணம் செய்ய வேண்டாம்.
  • அதே பயணத்தில் உங்கள் பயணச்சீட்டுகளை மற்றொரு நபருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
  • நடைமேடையில் உள்ள மஞ்சள் கோட்டைக் கடக்க வேண்டாம்.
  • மெட்ரோ ரயில் பாதையை கடக்கவேண்டாம்.
  • பயணச்சீட்டு தடையைத் தாண்டிச் செல்ல வேண்டாம்.
  • இரயில் கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்க முயற்சிக்க வேண்டாம்.
  • மெட்ரோ நிலையம் அல்லது இரயிலுக்குள் சுவரொட்டிகளை இடவோ சிதைக்கவோ வேண்டாம்.
  • ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்
  • மெட்ரோ இரயில் வளாகத்திற்குள் புகைபிடிக்க வேண்டாம்
  • நிலைய வளாகத்திற்குள் மற்றும் இரயில்களில் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.
  • மெட்ரோ வளாகங்கள் அல்லது ரயில்களுக்குள் செல்லப்பிராணிகளை கொண்டு வர வேண்டாம்.

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : July 22, 2024