மெட்ரோ இணைப்பு (இணைப்பு சேவை)

மெட்ரோ மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, திறமையான மற்றும் வசதியான பயணத்தை நாங்கள் உறுதி செய்கிறோம். பயணிகள் செல்ல வேண்டிய கடைசி இலக்கு வரை, மெட்ரோ இணைப்பு சேவையை நீட்டிப்பதன் மூலம் பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதைப்போன்று பயணிகளுக்கு, இலவச மிதிவண்டி, வாடகை இரு சக்கர வாகனங்கள், வாடகை ஆட்டோக்கள் மற்றும் வாடகை மின்னணு மிதிவண்டி வசதிகள் கிடைப்பதை உறுதி செய்கிறோம்.

சி.எம்.ஆர்.எல் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, அவர்கள் செல்ல வேண்டிய கடைசி இலக்கு வரையிலான, இணைப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக,பெருநகர போக்குவரத்து கழக சிறிய பேருந்து சேவைகள் பின்வரும் நிலையங்களிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

பெருநிறுவனங்களுக்கான பிரத்யோக மெட்ரோ இணைப்பு

  • அறிஞர் அண்ணா ஆலந்தூர் முதல் டி.எல்.எஃப் சைபர்சிட்டி, ராமபுரம் வரை.
  • அறிஞர் அண்ணா ஆலந்தூர் முதல் ஆர்.எம்.இசட் ஒன் பாரமவுண்ட், போரூர் வரை.
  • திருமங்கலம் மெட்ரோ நிலையம் முதல் காஸ்மோ ஒன் IT பார்க், அம்பத்தூர் வரை.
  • சின்னமலை மெட்ரோ நிலையம் முதல் இன்டர்நேஷனல் டெக்பார்க் கேம்பஸ்(ITPC), தரமணி வரை.

விண்ணப்ப படிவம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : November 25, 2024