சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இந்த இணையதளத்திற்கு (i.e Chennaimetrorail.org) வருபவர்களின் நம்பிக்கையை பராமரிக்க முற்றிலும் உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும், எந்தவொரு தனிநபருக்கும் அல்லது அமைப்பிற்கும், எந்தவொரு பயனரின் தனிப்பட்ட தகவலையும், சி.எம்.ஆர்.எல் விற்கவோ, வாடகைக்கு விடவோ, வர்த்தகம் செய்திடவோ அல்லது வெளியிடவோ செய்யாது.
இந்த இணையதளத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாட்டாளர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகும், அதன் பதிவு அலுவலகம் நிர்வாக கட்டிடம், சி. எம். ஆர். எல் பணிமனை, பூந்தமல்லி நெடுஞ்சாலை , கோயம்பேடு, சென்னை 600107-இல் உள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள், பொது நலனுக்காக சி.எம்.ஆர்.எல் பற்றிய தகவல்களை வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் www.chennaimetrorail.org -இல் உள்ள தகவல் அல்லது உள்ளடக்கத்தை தனிப்பட்ட மற்றும் வணிகமற்ற பயன்பாட்டிற்காக மட்டுமே அணுகலாம் அல்லது பதிவிறக்கலாம். இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களை அங்கீகரிக்கப்படாத பயன்பாடு/சட்டவிரோதமாக பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளத்தைப் பார்வையிடும் நபர்களின் களப்பெயர்கள், இணைய நெறிமுறை முகவரிகள் மற்றும் உலாவி வகைகளை சி.எம்.ஆர்.எல் கண்காணிக்கலாம். இந்தத் தகவல்கள், மொத்த தகவல் போக்குவரத்து முறைகளை கண்காணிக்க மற்றும் உள் தணிக்கை அறிக்கைகளை தயாரிக்க பயன்படுத்தப்படலாம். அத்தகைய தகவல்கள், எந்தவொரு தனிப்பட்ட தகவல்களுடனும் தொடர்புபடுத்தப்படவில்லை, மேலும், அது யாருடனும் அல்லது எங்கும் பகிரப்படாது. இந்த தளத்தில் சில இணைப்புகள் இருக்கலாம், இது சி.எம்.ஆர்.எல் க்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாத மூன்றாம் தரப்பினரால் பராமரிக்கப்படும் சேவையகங்களுக்கு வழிவகுக்கும். மூன்றாம் தரப்பு சேவையகங்களில் உள்ள எந்தவொரு பொருளுக்கும் சி .எம் ஆர்.எல் எந்த விதமான பொறுப்பையும் ஏற்காது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இந்த வலைப்பக்கமானது, தகவல்கள்/ காணொளிகளை, பயணிகள் மற்றும் பொதுமக்களின் சிறந்த வசதிக்காக, சமூக வலைத்தள பக்கங்களான, முகநூல், வலை ஒளி போன்றவற்றின் வழியாக பகிர்கிறது. இந்த தளத்தை தொகுப்பு செய்திடும் அமைப்பு மூலம் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது தளத்தை உலாவும்போது ஏதேனும் பிழை / சிரமம் ஏற்பட்டால், அதற்கு எப்போதும், சி.எம்.ஆர்.எல் பொறுப்பேற்காது.
சி.எம்.ஆர்.எல் -ன் எவ்வித முன் அனுமதியும் இன்றி வலைத்தளத்தின் எந்தப் பக்கத்தையும் வேறு எந்த இணையதளத்திலும் ஏற்றவோ அல்லது மிகை இணைப்பு செய்யவோ யாருக்கும் அனுமதி இல்லை. மேலும், எந்தவொரு பயன்பாடு/வலைப்பதிவு அல்லது எந்த சமூக ஊடகப் பக்கங்களையும் சி.எம்.ஆர்.எல் இணையதளத்தில் மிகை இணைத்திட அனுமதி இல்லை.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவன வலைத்தளத்தை அணுகுவதன் மூலம், வலைத்தளத்தைப் பயன்படுத்துவது அல்லது பயன்படுத்த இயலாமை மற்றும் இந்த வலைத்தளத்தில் உள்ள தகவல்களிலிருந்தோ அல்லது அதன் எந்த இணைப்பிலிருந்தோ எழும் எந்தவொரு நேரடி அல்லது மறைமுக இழப்புக்கும் சி.எம்.ஆர்.எல் பொறுப்பேற்காது என்பதை பயனர் ஒப்புக்கொள்கிறார். வலைத்தளத்தின் பயன்பாடு அல்லது எழக்கூடிய எந்தவொரு தற்செயலான சிக்கலுக்கும், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களாலே நிர்வகிக்கப்படும். மேலும், இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர் தன்னை, சென்னையில் உள்ள நீதிமன்றங்களின் பிரத்தியேக அதிகார வரம்பிற்குள்ளாக, செயல்பட சம்மதிக்கிறார்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவன வலைத்தளம், பயனர் ஆங்கிலம் மற்றும் தமிழை மாற்றி பயன்படுத்திட குக்கீகளைப் பயன்படுத்துகிறது. மேலும், இது பயனரின் அனுபவத்தை மேம்படுத்திட உதவுகிறது. இதன் வழியாக எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேகரிக்கபடுவதில்லை. இந்த வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் பதிப்புரிமை பிரத்தியேகமாக சி.எம்.ஆர்.எல் -க்கு மட்டுமே சொந்தமானது. இந்த வலைத்தளத்தை பயன்படுத்துவதாலே, இதிலுள்ள தகவல்களை மறுபதிப்பு செய்திடவோ அல்லது அனுப்பவோ அல்லது எங்கும் சேமிக்கவோ அல்லது அதன் எந்தவொரு பகுதியின் உள்ளடக்கங்களையும் எந்த வகையிலும் பரப்பவோ பயனருக்கு உரிமம் வழங்கபடவில்லை.
சி .எம் ஆர்.எல் மேலாண்மை கொள்கை விதிமுறைகளின்படி அல்லது இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, அவ்வப்போது, அதன் தனியுரிமைக் கொள்கையை மாற்றவோ திருத்தவோ முழு உரிமையும் கொண்டுள்ளது.
இந்த இணையதளம் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு நிறுவனமான சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இந்த வலைத்தளத்தில் உள்ள தகவல்கள், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் ‘சிறந்த முயற்சி’ மற்றும் ‘உள்ளது போலவே’ அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள தகவலின் குறிப்பிட்ட நோக்கத்திற்கான முழுமை, துல்லியம், நேரம் தவறாமை, செயல்திறன், தகுதி குறித்து வழங்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதித்துவம் அல்லது ஒப்புதல் அல்லது உத்தரவாதம் (வெளிப்படையான அல்லது மறைமுகமான) விலக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் உள்ள எந்தவொரு தகவலையும், தரவையும் அல்லது பொருளையும், எவ்வித சட்டவிரோதமான, மோசடி, ஒழுக்கக்கேடான, அவதூறான மற்றும் பொதுக் கொள்கைக்கு எதிரான எந்தவொரு பயன்பாடு அல்லது செயல்பாடு அல்லது நோக்கத்திற்காகவும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது. சி .எம் ஆர்.எல் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்வதற்காக, வெளியிடப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், அத்தகைய பதிவிறக்கம் உங்கள் சுயவிருப்பப்படி மற்றும் ஆபத்தில் செய்யப்படுகிறது. மேலும், உங்கள் கணினிக்கு ஏதேனும் சேதம் அல்லது இழப்பு, தரவு இழப்பு அல்லது வேறு ஏதேனும் முன்கூட்டியே அல்லது எதிர்பாராத சேதம் அல்லது இழப்புக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும் எந்தவொரு தகவலையும் அல்லது பொருளையும் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு இழப்பு அல்லது சேதத்திற்கும் நாங்கள் எவ்வித பொறுப்பையும் ஏற்கவில்லை.
எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும் எந்தவொரு உள்ளடக்கமும் அல்லது தகவலும் மாற்றம் அல்லது திருத்தத்திற்குட்பட்டது. எந்தவொரு அறிவிப்பும் அல்லது எச்சரிக்கையும் இல்லாமல் எங்கள் வலைத்தளத்திலிருந்து எந்தவொரு உள்ளடக்கத்தையும் மாற்றவோ, திருத்தவோ எங்களுக்கு உரிமை உண்டு. அவ்வாறான எவ்வித மாற்றத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய எந்தவொரு நேரடி அல்லது மறைமுக அல்லது விளைவு இழப்பு அல்லது சேதத்திற்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். எனவே, இந்த தகவலை நீங்கள் செயல்படுத்துவதற்கு முன்பு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவன உதவி எண் 18604251515 அல்லது 04423792000 ஐ அழைப்பதன் மூலம், சரிப்பார்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும், இந்திய சட்டங்களின்படி நிர்வகிக்கப்படும் மற்றும் வரையறுக்கப்படும். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் எழும் எந்தவொரு சர்ச்சையும் சென்னை நீதிமன்றங்களின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும்.
எங்கள் வலைத்தளத்தின் சேவைகளுக்காக உங்கள் அணுகல் மற்றும் பயன்பாட்டிற்கு பொருந்தும் என்பதால், இந்த பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாக படிக்கவும். எங்கள் வலைத்தளத்திற்கு வருபவர்களைப் பற்றிய தகவல்களைக் கையாள்வது தொடர்பாக, நாங்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகளையும், வகுக்கும் தனியுரிமைக் கொள்கையிலும், நீங்கள் குறிப்பாக கவனம் செலுத்திட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் சொந்த நலன்களைப் பாதுகாக்க, தயவுசெய்து இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும், ஒப்புக்கொள்வதற்கு முன்பாக கவனமாக படிக்கவும். நீங்கள், எங்களுடன் ஒரு பயனர் கணக்கிற்காக முதலில் பதிவு செய்யும் போது, இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து, தொடர விரும்புகிறீர்கள் என்பதைக் குறிக்கும் ஒரு பெட்டியை சரிபார்க்கும்படி கேட்கப்படுவீர்கள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் உடன்படவில்லையென்றால், எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியாது.
எங்கள் வலைத்தளம் மற்றும் அதன் மூலம் நாங்கள் வழங்கும் சேவைகள் தொடர்பான, இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நமக்கிடையேயான முழு ஒப்பந்தத்தையும் உருவாக்குகிறது. மேலும், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இதற்க்கு முன்பாக எங்கள் வலைத்தளத்தில் உள்ள பொருள் தொடர்பாக மின்னணு, வாய்வழி அல்லது எழுதப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களை மீறுகின்றது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அச்சிடப்பட்ட பதிப்பு மற்றும் மின்னணு வடிவத்தில் வழங்கப்பட்ட எந்தவொரு அறிவிப்பும், பிற வணிக ஆவணங்கள் மற்றும் பதிவுகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பராமரிக்கப்படுவதை போன்று, இந்த ஆவணமும் நீதித்துறை அல்லது நிர்வாக நடவடிக்கைகளில் அதே அளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் பதிப்புரிமை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமானது. இந்த வலைத்தளத்திற்கான உங்கள் அணுகல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கங்களை மறுபதிப்பு செய்யவோ, அனுப்பவோ அல்லது எங்கும் சேமிக்கவோ அல்லது பரப்பவோ உங்களுக்கு உரிமம் வழங்காது.
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 2, 2024