சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு நோக்கு நிறுவனத்தை உருவாக்கியது.
"சென்னை மெட்ரோ இரயில்" என்று பெயரிடப்பட்ட இந்த நிறுவனமானது, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 03.12.2007 அன்று இணைக்கப்பட்டது. இது தற்போது, மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டாக, சமமான பங்குகளுடன் கூடிய நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.
மக்களின் பயணம், நிலையான வளர்ச்சி.
பாதுகாப்பான, வேகமான, நம்பகமான, அணுகக்கூடிய, வசதியான, திறமையான மற்றும் மலிவு விலையில் பொதுப் போக்குவரத்து சேவையை என்றென்றும் நாங்கள் வழங்குவோம் .
எங்களின் அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும், பாதுகாப்பான, சுத்தமான, நம்பகமான, குறித்த நேரத்தில் மரியாதையான சேவையை வழங்க நாங்கள் உறுதியளிக்கிறோம்.
எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுடான பரிவர்த்தனைகளில் , வெளிப்படையாகவும் , நியாயமாகவும் இருக்க நாங்கள் உறுதியளிக்கிறோம்.
பசுமையில்லம் உமிழ்வைக் குறைப்பதற்காக நிலையான (மறுப்பு, குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் மறுபரிசீலனை) கொள்கைகளின் அடிப்படையில் எங்கள் முடிவுகளை எடுக்க நாங்கள் உறுதியளிக்கிறோம்.
சி.எம்.ஆர்.எல் வளங்களை , நிதி மற்றும் நிதி அல்லாதவற்றை , மிக உயர்ந்த பொறுப்புடன் நிர்வகிப்பதன் மூலம் , பொதுமக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காத்திட நாங்கள் உறுதியளிக்கிறோம்.
எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்கும் வண்ணம் , படைப்பாற்றல், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்திடவும் , பயன்படுத்திடவும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து பாடுபட நாங்கள் உறுதியளிக்கிறோம்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடி சேவையை வழங்குவதற்கும், எங்கள் வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் காலந்தவறாமையை கடைப்பிடித்திட நாங்கள் உறுதியளிக்கிறோம்.
அதிவேகமாக வளர்ந்து வரும் நமது சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. எனவே, புதிய இரயில் அடிப்படையிலான விரைவு போக்குவரத்து அமைப்பின் தேவை உணரப்பட்டு, அந்த நோக்கத்திற்காக சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. சென்னை மக்களுக்கு, பேருந்துகள், புறநகர் இரயில்கள் மற்றும் பறக்கும் இரயில் உள்ளிட்ட பிற பொது மற்றும் தனியார் போக்குவரத்துடன் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட, விரைவான, நம்பகமான, வசதியான, திறமையான, நவீன மற்றும் சிக்கனமான பொதுப் போக்குவரத்தை வழங்குவதை, இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு நோக்கம் கொண்டவாகனத்தை (எஸ். பி. வி) உருவாக்கியது. "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்" என்று பெயரிடப்பட்ட இந்த எஸ். பி. வி., நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 03.12.2007 அன்று இணைக்கப்பட்டது.
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : Aug 03, 2024