ISO 9001:2015 மற்றும் ISO 14001:2015 சான்றளிக்கப்பட்டது
53 வயதுடைய திரு. ஆஷிஷ் சட்டர்ஜி, அவர்கள், தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணியின் 1999 ஆம் ஆண்டு பணித் தொகுதியைச் சேர்ந்த ஒரு முதுநிலை மத்திய அரசுப் பணியாளர் ஆவார். இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT) முன்னாள் மாணவரான இவர், வேதியியல் (இரசாயனம்) பொறியியலில் இளநிலைப் பட்டதாரியும் ஆவார் மாநில மற்றும் மத்திய அரசு ஆகிய இரண்டு அரசுகளிலும் பணியாற்றிய இவர், 26 ஆண்டுகள் பரந்த நிருவாக அனுபவம் பெற்றவராகத் திகழ்கிறார்.
விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியது உட்பட தமிழ்நாட்டில் முககியமான தலைமைப் பதவிகளையும் இவர் வகித்துள்ளார். இவ்வாறு இவர் பணியாற்றிய இடங்களில், அடிமட்ட நிலையில் (கிராம அளவில்) நிருவாகம் செய்வதில் சிறப்பாகப் பணியாற்றிய இவர், மேம்பாட்டு நடவடிக்கைகளையும் (முன்னேடுப்புகள்) மேற்கொண்டார். மேலும், இவர் சென்னை மாநகராட்சியில், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாநகர நிருவாகத் (ஆளுகை) துறையிலும் பணியாற்றியுள்ளார்.
திரு. ஆஷிஷ் சட்டர்ஜி அவர்கள், மத்திய அரசில், பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளில் பணியாற்றியுள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக்த்தின் இணைச் செயலாளர் என்ற வகையில், கொள்கை உருவாக்கம் மற்றும் துறைவாரியான மேற்பார்வை ஆகியவற்றில் ஓர் அச்சாணி போன்று மிக முக்கியமான பங்காற்றியுள்ளார். மேலும் இவர், கெய்ல் (இந்தியா) நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுமத்தில் அரசு நியமன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்த வகையில் எரிசக்தி துறையில் உத்திசார்ந்த முடிவெடுப்பதற்கு ஏற்ற வகையில் சிறந்த பங்காற்றியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், இவர், மத்திய அரசின் உருக்கு அமைச்சகத்தில் கூடுதல் மத்திய அரசு செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் பதவியை வசித்தார். அங்கு அவ்வாறு பணியாற்றியபோது, நிதி நிருவாகத்தை இவர் மேற்பார்வை செய்ததுடன், உருக்குத் துறை தொடர்பான நிதி விவகாரங்கள் குறித்து ஆலோசனையும் நல்கினார். மேலும், இவர் இந்திய உருக்கு அதிகார மன்றம் (ஆணையம்) மற்றும் NMDC லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுமத்திலும் பணியாற்றினார்.
2026 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் திரு. ஆஷிஷ் சட்டர்ஜி அவர்கள், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அரசு முதன்மைச் செயலாளர்/ மேலாண்மை இயக்குநர் பதவியை ஏற்றார்.
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : September 21, 2026