மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்

ஒவ்வொரு மெட்ரோ நிலையமும் சாலை நிலையிலிருந்து நடைமேடை நிலை வரையும் மற்றும் இரயில்களுக்குள்ளாகவும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகுவதற்க்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

  • மெட்ரோ நிலையங்களில், மாற்றுத்திறனாளிகள் அவர்கள் இறங்கும் இடத்திலிருந்து சாய்வுதளம் வசதியுடன், பிரத்யோக நடைபாதை வழியாக எளிதில் மின்தூக்கியை சென்றடையும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இறங்கும் இடத்திலிருந்து நிலைய மின்தூக்கி நுழைவாயிலுக்கு தொடுபுலன் குறியீடு.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலைய நுழைவாயிலுக்கு அருகில் பிரத்யேக வாகன நிறுத்துமிடம்.
  • 1:12 சாய்வு கொண்ட நுழைவுத் தளம், சாலை மட்டத்திலிருந்து நடைபாதை மட்டத்தையும் அடுத்த நிலையும் இணைக்கின்றன.
  • பார்வையற்றவர்களுக்கான தொடுபுலன் குறியீடு நிலைய நுழைவு முதல் பொதுத்தளம் வரையும் மற்றும் இறுதியில் பயணச்சீட்டு அலுவலகம் வழியாக நடைமேடை வரையும்.
  • பொதுத்தளத்தில் குறைந்த உயரம் கொண்ட பயணச்சீட்டு மையம்.
  • சக்கர நாற்காலி அணுகலுக்கான, அகலமான தானியங்கி கட்டணம் வசூல் வாயில்கள்.
  • படிக்கட்டுகளின் இருபுறமும் 900 மிமீ உயரத்தில் தொடர்ச்சியான கைப்பிடிகள்.
  • சாலை நிலையிலிருந்து பொதுத்தளம் வரையிலும்,பொதுத்தளத்திலிருந்து நடைமேடை வரையும் மின்தூக்கி வசதி.
  • நடைமேடையில் மாற்றுத்திறனாளிகளுக்காக கைப்பிடியுடன்கூடிய சிறப்பு நாற்காலிகள்.
  • 100 மிமீ அகல எச்சரிக்கை கீற்றுகள், நடைமேடை மட்டத்தில் நடைமேடை விளிம்பில் இருந்து 600 மிமீ தொலைவில் பொருத்தப்பட்டுள்ளது.
  • குறைந்த உயரத்தில் குடிநீர் வசதிகள்.
  • மெட்ரோ நிலையங்களுக்குள் இரயில்களின் வருகை/புறப்பாடு போது மணியோசை மற்றும் ஆடியோ குறியீடு.
  • பொதுத்தளம்/நடைமேடை நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் உள்ளது.
  • மாற்றுத்திறனாளி கழிப்பறைகளுக்குச் செல்லும் வகையிலான தொடுபுலன் குறியீட்டு பாதை.
  • படிக்கட்டின் தொடக்கத்திலும் முடிவிலும் வண்ண மாறுபட்ட கீற்றுகள்.
  • சக்கர நாற்காலியை அணுகுவதற்கான வசதியுள்ள இரயில் பெட்டியின் வெளியே அதற்கான அடையாளப் பலகை.
  • கணினி அடிப்படையிலான பொது அறிவிப்பு அமைப்பு.
  • இரயில்களுக்குள் நீண்ட நேரம் நிறுத்துவதற்கான பொத்தான்கள்.
  • இரயில்களுக்குள் சக்கர நாற்காலிகளை நிறுத்துவதற்கான பிரத்யோக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பிரெய்லி அமைப்பு மற்றும் மின்தூக்கிகளின் உள்ளே கைப்பிடி வசதி.
  • படிக்கட்டுகளை எளிதில் அடையாளம் காண காடி அமைத்தல்.
  • மின்தூக்கிகளில் குறைந்த உயர்த்திலான விசைபலகைகள்.
  • நிலையக் கட்டுப்பாட்டு அறையில் சக்கர நாற்காலிகள் மற்றும் துாக்கு படுக்கைகள் வைத்திருத்தல்.
  • காது கேளாதவர்களுக்கான காந்தப்புல செவியுணர் கருவி பொருத்துதல்.
  • பொருத்தமான இடங்களில் தகவல் பலகைகள் உள்ளன.

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 3, 2024