திட்டத்தின் அவசியம்

வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வரும் சென்னை மாநகரின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெருகிக் கொண்டே வருகிறது. எனவே, இருப்புப்பாதை அடிப்படையிலான விரைவான போக்குவரத்து திட்டம் ஒன்றின் தேவையினை உணர்ந்து, சென்னை மொட்ரோ இரயில் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், பேருந்து உள்ளிட்ட தனியார் போக்குவரத்து, புறநகர் இரயில் சேவை மற்றும் துரித போக்குவரத்து இரயில் திட்டம் இவைகளுடன் இணைந்து, விரைவான, வசதியான, நம்பிக்கைக்கு உகந்த, செயல்திட்பமுடைய, அதிநவீன, சிக்கனத்தின் அடிப்படையிலான போக்குவரத்து திட்டம் ஒன்றினை வழங்கிடுவதே இந்த சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் நோக்கமாகும்.