திட்ட குறிப்பு

இந்த திட்டம் தொடர்பாக ஒரு விரிவான திட்ட அறிக்கையினை டெல்லி மெட்ரோ இரயில் கழகம் தயாரித்துள்ளது. இந்த அமைப்பு மெட்ரோ இரயில் திட்டதை டெல்லியில் சிறப்பாக அமைத்து செம்மையாக செயல்படுத்தி வருகின்றது. இந்த விரிவான திட்ட அறிக்கையில் முதற்கட்டமாகக் கீழே காணும் இரண்டு மெட்ரோ இரயில் வழித்தடங்களை அமைத்திடலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது:-

மெட்ரோ இரயில் வழித்தடம்தொலைவுவழித்தட விவரங்கள்:
வழித்தடம் - 1

வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை
23.1 கி.மீ.வண்ணாரப் பேட்டை -பிராட்வே (பிரகாசம் சாலை) - சென்னை சென்ட்ரல்-ரிப்பன் மாளிகை - கூவம் கரை ஒரமாக - அரசினர் தோட்டம்-தாராப்பூர் கட்டிடம்-ஸ்பென்ஸர்ஸ்-ஜெமினி-அண்ணா சாலை-சைதாப்பேட்டை - கிண்டி-சென்னை விமான நிலையம்.
வழித்தடம் - 2

சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை
22 கி.மீ.சென்னை சென்ட்ரல் - ஈ.வே.ரா பெரியார் சாலை வழியாக வேப்பேரி - கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - அமைந்தக்கரை - ஷெனாய் நகர் - அண்ணாநகர் கிழக்கு - அண்ணாநகர் இரண்டாவது நிழற்சாலை - திருமங்கலம் - கோயம்பேடு பேருந்து நிலையம் - ஜவகர்லால் நேரு சாலை வழியாக - வடபழனி - அசோக்நகர் - சிட்கோ - ஆலந்தூர் - புனித தோமையர் மலை.
மொத்தம்45.1 கி.மீ.

முதல் வழித்தடத்தில், வண்ணாரப் பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை 14.3 கி.மீ் தூரம் சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும். இரண்டாவது வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர் இரண்டாவது நிழற்சாலை வரை 9.7 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைக்கப்படவுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு வழித்தடங்களிலுள்ள பாதைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள் தற்காலிகமானவை. இவை விரிவாக வடிவமைத்து செயல்படுத்த்டப்படும் போது மாறுதல்களுக்கு உட்பட்டவையாகும்