திட்டத்தின் நிலை

திட்டம் நிறைவு பெறுதல்:
முதல் கட்டப் பணிகள் 2016-ல் நிதியாண்டில் முடிவுறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஒப்புதல்:
தமிழ்நாடு அரசு 07.11.2007 அன்று இரண்டு மெட்ரோ இரயில் வழித்தடங்களுக்கும் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு 28.01.2009 அன்று சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜப்பான் நாட்டு நிதி உதவிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடுதல்:
இந்த திட்டத்திற்கான அடிப்படை செலவுத்தொகை (base cost) ரூ.14,000 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவில் 41ரூ -னை மாநில, மத்திய அரசுகள் கூட்டாகப் பகிர்ந்துகொள்ளும். மீதி செலவுத் தொகை ஜப்பானின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பிடம் இருந்து (Japan International Cooperation Agency (JICA)) கடனாகப் பெறப்படும். ஜப்பானின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பு இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிட ஒப்புதல் அளித்து, அதற்கான ஒப்பந்தம் 21.11.2008 அன்று டோக்கியா நகரில் கையெழுத்தானது

பொது ஆலோசகர்கள் நியமனம்:
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகளுக்கான “”பொது ஆலோசகர்கள்”” (General Consultants) 24.02.2009 அன்று தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈஜிஸ் இரயில் (Egis Rail, France) என்ற நிறுவனத்தின் தலைமையில் ஐந்து நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பு, மெட்ரோ இரயில் திட்டத்திற்கான பொது ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்கூட்டமைப்பின் பிற உறுப்பினர்கள் (அ) ஈஜிஸ் இந்தியா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியா (Egis India Consulting Engineers Private Ltd, India)(ஆ) மான்செல் கன்சல்டன்ட்ஸ் ஏசியா லிமிடெட், ஹாங் காங் (Maunsell Consultants Asia Ltd, Hong Kong), (இ) பாலாஜி இரயில் ரோடு சிஸ்டம்ஸ் லிமிடெட், இந்தியா (Balaji Rail Road Systems Ltd, India) மற்றும் (ஈ) யாச்சியோ இன்ஜினியரிங் கோ லிமிடெட், ஜப்பான் (Yachio Engineering Co Ltd, Japan). சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான வடிவமைப்பு (Design), மேற்பார்வை (Supervision), தரக்கட்டுப்பாடு (Quality Control), பாதுகாப்பு (Safety) மற்றும் ஒப்பந்தக் கட்டுப்பாடு மேலாண்மை (Contract Management) ஆகியவற்றில் பொது ஆலோசகர்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு உரிய ஆலோசனைகள் வழங்கி உதவுவார்கள்.